விரைவில் காஷ்மீரில் துவங்கும் படப்பிடிப்பு – ராணுவ அதிகாரியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

தமிழில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான “ரங்கூன்” திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குநர் தான் ராஜ்குமார் பெரியசாமி. தற்பொழுது இவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடைய 21வது படத்தை இயக்க உள்ளார்.
உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்காக சில பிரத்தியேக பயிற்சிகளை சிவகார்த்திகேயன் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, தற்பொழுது இந்த படக்குழு படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளது. விரைவில் அங்கு படபிடிப்பு பணிகள் துவங்க உள்ளது என்றும், முற்றிலும் மாறுபட்ட விதத்தில் ஒரு ராணுவ அதிகாரியின் கதாபாத்திரம் ஏற்று சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.