மும்பையில் வெறித்தனமான ட்ரைனிங் – ராஜ்கமல் தயாரிப்பில் நடிக்க தயாராகும் SK!

சிவகார்த்திகேயன் இறுதியாக 2022ம் ஆண்டு வெளியான Prince படத்தில் தோன்றினார். தற்பொழுது மாவீரன் மற்றும் பெயரிடப்படாத இன்னொரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவருடைய அயலான் திரைப்படம் வெகு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறியுள்ள நிலையில் பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். மேலும் மாவீரன் படத்தை தொடர்ந்து கமலஹாசன் அவர்களுடைய ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த படத்திற்காக மும்பைக்கு சென்று 20 நாட்கள் தொடர்ந்து கடும் பயிற்சி எடுத்து வந்திருக்கிறார் சிவா என்று கூறப்படுகிறது. விரைவில் காஷ்மீரில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனது சினிமா பயணத்தில் இந்த படத்தை மிகமுக்கிய படமாக பார்ப்பதாக ஏற்கனவே SK கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவீரன் திரைப்படமும் நல்ல முறையில் உருவாகியுள்ளது, இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கி புகழ்பெற்ற அஸ்வின் இயக்கி வருகின்றார்.