சர்க்கரை நோயை அடித்து விரட்டும் சிவரிக்கீரை

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் சிவரிக்கீரையில் அதிகமாக காணப்படுகின்றன.
சிவரிக்கீரை சுவையில் மட்டுமல்லாமல், இது நம் ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மையை தருகிறது. இக்கீரையை உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதனுடன் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவில் சிவரிக்கீரையை சேர்த்து சாப்பிட்டால் அது அவர்களுக்கு நல்ல மருந்தாக இருந்து வருகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிவரிக்கீரையில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது.
அஜீரணம் மற்றும் வாயு, வயிற்று பிரச்சனை நோய்களை சிவரிக்கீரை குணப்படுத்தும். வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகளும் வராமல் தடுக்கிறது.

மேலும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வேண்டுமானால் சிவரிக்கீரை சாறு போல் அரைத்து அதனை தோல் மீது தடவ வேண்டும். அப்படி செய்தால் சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
சிவரிகீரையை சூடான பாலில் சேர்த்து சாப்பிட்டால் நமது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மேலும் சிவரிக்கீரையுடன் வேப்பம் பொடி, சீரக தூள் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடும் போது ரத்தத்தை சுத்திகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள், வீட்டு வைத்தியங்களையும் எடுத்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். எப்படியென்றால் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து சிவக்கீரையுடன் தேநீர் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் முற்றிலும் குணமாக வாய்ப்புள்ளது.
இது போன்று மருத்துவம், அனைத்து கீரைவகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.