வயதான தோற்றம் வராமல் இருக்கணுமா? இந்த டிப்ஸ் உங்களுத்தான்

வயது அதிகரிக்க, அதிகரிக்க வயதான தோற்றம் வருவது இயல்புதான். இருப்பினும்
சிலருக்கு இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம்
வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் தான்.

நேரத்திற்கு சாப்பிடாதது, சரியான தூக்கமின்மை போன்றவற்றால் கண்ணிற்குகீழ் கருவளையமும், முகத்தில் சுருக்கமும் ஏற்படும். இது இளமையிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதற்கு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

Advertisement

நமது தோல் ஒரு திராட்சைப்பழம் போன்றது. எப்படி திராட்சை பழம் தண்ணீரை இழக்க ஆரம்பித்தவுடன், அது சுருங்கி, சுருக்கங்கள் தெரியுமோ, அதே போன்று தான் நமது தோலும். ஆனால் ஈரப்பதத்தை திரும்ப பெற்றவுடன் நமது தோல் பழைய நிலைக்கு வந்துவிடும். எனவே வயதான தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடிய கண்களுக்குக் கீழே உள்ள பகுதிக்கு ஈரப்பதமூட்டுவது அவசியம்.

கண்களுக்கு மஸ்காரா, ஐ ஷேடோ, கன்சீலர், காஜல் மற்றும் ஐ லைனர்கள் போன்ற பல மேக்அப் பொருட்களை பயன்படுத்துகிறோம். அவை கண்களுக்குள்ளும் அதை சுற்றிலும் ஏராளமான அழுக்குகளை சேர்த்து விடுகின்றன. எனவே இவற்றை சுத்தம் செய்ய அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்ற ஒரு சிறந்த க்ளென்சரைத் பயன்படுத்தலாம்.

மேலும் ஐ மேக்கப் ரிமூவராக பஞ்சை எளிதாக பயன்படுத்தலாம். சுத்தம் செய்யும்போது, உள்ளே இருந்து வெளியே கண்களை முழுவதும் துடைக்க வேண்டும். அப்போது தான் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும் சுருக்கங்கள் வராமல் இது தடுக்கும்.