தொப்பையால் இவ்வளவு தொல்லைகளா..? தொப்பை பற்றி அறியாத பல தகவல்கள்..!

தொப்பை என்பது தற்போதைய வாழ்க்கை முறையில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த தொப்பையால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பது பற்றியும், தொப்பைகள் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள் பற்றியும் நாம் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தொப்பையும்.. அதன் காமெடியான தகவல்களும்..தொப்பை பொதுவாக போலீஸ்காரர்களுக்கு மட்டும் தான் உள்ளது என்பது போன்ற கருத்துகள், விவேக் செய்யும் காமெடிகளை பார்த்திருப்போம். உண்மையி;ல் சொல்லப் போனால், அதுவே பெரிய காமெடி தான். ஏனென்றால், போலீஸ்காரர்களை விட, சாமானிய மக்களுக்கு தான் அதிக அளவிலான தொப்பைகள் உள்ளதாம்.
தொப்பை என்பது நம் முன்னோர்கள் நமக்கு அளித்த விட்டு சென்ற செத்து பத்து தான் இந்த தொப்பை. அதாவது, இயற்கையாகவே,இந்தியாவில் கார்ப்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் தான் அதிகமாக விளைகிறது. இதனால், இந்தியர்களின் ஜீன்களிலேயே இதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
நியூயார்க் மாகாணத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், தனக்கு தொப்பை அதிகரித்ததற்கு போலீஸ் வேலையே காரணம் என்று கூறி, மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை நிவாரணமாக பெற்று வருகிறாராம். இந்த மாதிரியான விஷயம் தமிழகத்தில் சாத்தியமாக இருக்குமானால், போலீஸ்களுக்கு நிவாரணம் வழங்கியே, கஜானா காலி ஆகி இருக்கும் என்பது நிதர்சணம்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாடைப்பு போன்ற பிரச்சனைகள், தொப்பைக் கொண்டவர்களுக்கே உரித்தான வியாதிகள் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள். எனவே சரியான அளவு உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுக்குள் கொண்ட வரப்பாருங்கள்.