Search
Search

“செம லுக் தலைவா”.. அப்பாவின் புது தோற்றம் – போட்டோ போட்டு கொண்டாடிய சௌந்தர்யா

திரைத்துறையில் பெரிய அளவில் சாதிக்கும் நடிகர், நடிகைகளுடைய வாரிசுகளும் தற்பொழுது சினிமாவில் இருப்பது இயல்பான ஒன்றாகத் தான் இருந்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரு மகள்களும் சினிமா துறையில் தான் இருந்து வருகின்றனர்.

1999ம் ஆண்டு வெளியான படையப்பா படத்தின் மூலம் கிராபிக் டிசைனராக திரையுலகில் அறிமுகமானவர்தான் அவருடைய இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். தற்பொழுது அவர் Ocher என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ரஜினிகாந்த் படங்களை தொடர்ந்து தளபதி விஜயின் சிவகாசி மற்றும் விஷாலின் சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் டிராபிக் டிசைனாக பணியாற்றியுள்ளார். முதன் முதலில் இவர் இயக்கி வெளிவந்த திரைப்படம் கோச்சடையான்.

அதன் பிறகு விஐபி 2 படத்தையும் இவர் இயக்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது, தற்பொழுது தனது தந்தையை ரஜினிகாந்துடன் மும்பை சென்றுள்ள அவர் அங்கு தனது அத்தையின் வீட்டில் தனது தந்தையுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த நியூ லுக் செம தலைவா என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

You May Also Like