ஸ்படிகம் என்பது ஒரு விதமான பாறை வகையை சேர்ந்தது. இந்த ஸ்படிகம் அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் சிறப்பு வாய்ந்தவை என்று சொல்லப்படுகிறது.
ஸ்படிக மாலையில் கை வைத்தவுடன் ஒரு வித குளிர்ச்சியை உணர்ந்தால் அது நல்ல தரமான ஸ்படிக மாலையாகும்.
ஸ்படிக மாலையை அணிந்து கொள்வதால் நல்ல எண்ணங்களை தூண்ட செய்யும். தெய்வ அருள் கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து மனதை எப்போதும் அமைதியாக வைத்திருக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். தீய சக்திகளை நெருங்க விடாமல் பாதுகாக்கும். ஸ்படிக மாலை உடல் வெப்பநிலையை சீரான சரியான அளவில் இருக்க வைக்கும்.
இறைவனின் நாமத்தை உச்சரித்து ஸ்படிக மாலையை உருட்டும் போது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகும்.
ஆன்மிகத்தை பொறுத்தவரை ஸ்படிகம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. நமது பூஜை அறையில் ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை பூஜிக்கும் போது அபரிதமான ஈர்ப்பு சக்தி ஏற்படும்.
ஸ்படிகத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது மகா மேரு ஸ்படிகம். இதனை வெள்ளி அல்லது தாமிரத் தட்டில் வைத்து அபிஷேகம் செய்து வந்தால் சகல செல்வத்துடன் லஷ்மி கடாட்சம் கிடைக்கும்.
குளிர் பிரதேசங்களில் உள்ளவர்கள் குளிர்ச்சி தன்மை கொண்டவர்கள் கண்டிப்பாக இந்த ஸ்படிக மாலையை அணியக்கூடாது.