உங்கள் வாழ்த்துக்கு நன்றி சொல்ல மாட்டேன் ஆனா.. நடிகர் கார்த்தியின் பதிவுக்கு முதல்வர் சொன்ன பதில்

தற்பொழுது தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது, இந்த ஆட்சிக்கு எதிராக பலரும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் அதே நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு ஆதரவாகவும் பலர் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வேளாண் மக்களுக்கு பல நன்மைகள் உள்ளது என்று கூறி தனது ட்விட்டரின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி. அவர் வெளியிட்ட அந்த பதிவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம்.
வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.
கார்த்தியின் இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள ஸ்டாலின் அவர்கள், அன்புடைய கார்த்திக் அவர்களே, உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்! உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.
“பாராட்டுக்கு நன்றி எனச் ‘சொல்ல மாட்டேன்’; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண ‘செயலாற்றுவோம்’!” என்று கூறியுள்ளார்