அனுமதி இன்றி எடுக்கப்பட்டதா?.. கேப்டன் மில்லர் திரைப்பட படப்பிடிப்புக்கு தடை!

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் தற்பொழுது வெகு பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கத்தில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக மாபெரும் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் கடந்த ஓராண்டு காலமாக உருவாகி வருகிறது.
பல்வேறு திரைத்துறையை சார்ந்த நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். அண்மையில் இந்த திரைப்படத்தில், RRR படத்தில் நடித்து பிரபலமான அமெரிக்க நடிகர் எட்வர்ட் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியானது.
மேலும் தற்பொழுது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தென்காசி அருகே உள்ள ஓர் இடத்தில் நடந்து வந்தது. தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை என்ற இடத்தில் கேப்டன் மில்லர் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அங்கு ஷூட்டிங் செய்ய உரிய அனுமதி வாங்காமல் படபிடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அனுமதி வாங்காமல் படபிடிப்பு நடத்திய காரணத்தினால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அங்கு படபிடிப்பு நடத்த படக்குழுவிற்கு தடை விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்டேட் செய்யப்பட்ட தகவல் – தற்போது உரிய அனுமதி வாங்கி மீண்டும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.