Search
Search

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமா? – “தலைவர் 170” சில சுவாரசிய தகவல்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 169 வது திரைப்படமான ஜெயிலர் தற்பொழுது வேகமாக தயாராகி வருகிறது. இந்த படத்தை கோலமாவு கோகிலா, டான் மற்றும் பீஸ்ட் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

மேலும் சூப்பர் ஸ்டார் அவர்களின் 170வது திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்துவிட்டது. பிரபல லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, ஜெய் பீம் படத்தை இயக்கிய பெரும் வெற்றியை கொடுத்த ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் (தலைவர் 170) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று பரவலாக ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஞானவேல் இயக்கம் சூப்பர் ஸ்டார் 170வது படத்தில் அவர் ஒரு இஸ்லாமிய போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளதாகவும் கோலிவுட் வட்டார செய்திகள் கூறுகின்றது.

You May Also Like