Search
Search

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 – வெளியான சுவாரசிய தகவல்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குநர் தான் தேசிங்கு பெரியசாமி. வித்யாசமான கதைக்களத்துடன் சூப்பர் ஹிட்டான அந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களே அலைபேசியில் அழைத்து தேசிங்கை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

நமக்கு ஒரு கதை பண்ணுங்க, என்று சூப்பர் ஸ்டார் சொல்ல, தேசிங்கு அவர்களும் கண்டிப்பா சார் என்று கூற, ரசிகர்கள் படு குஷியில் மூழ்கினர். ஆனால் அதன் பிறகு பல காலம் அமைதியாக இருந்த தேசிங்கு தற்போது STR பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, தடபுடலாக ரெடியாகி வருகின்றது STR 48. இந்நிலையில் வரும் வாரத்தில் சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

என்ன கதைக்களம், யார் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

You May Also Like