வரலாற்று பகுதிகள் கலந்த மாஸ் கதை.. STR 48 – தேசிங்கு பெரியசாமி கொடுத்த தகவல்!

சிம்புவின் 48வது திரைப்படத்திற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது, இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தை உலக நாயகன் கமல் அவர்களுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட உள்ளது.
இன்னும் இந்த படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள்? என்பது குறித்த முழு தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை. நாயகியாக கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளராக அனிரூத் இணைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
STR 48, வரலாற்று பகுதிகள் கொண்ட பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம் என்றும், நிச்சயம் சிம்பு அவர்கள் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றுவர் என்றும் கூறியுள்ளார் இந்த படத்தின் இயக்குநர் தேசிங்கு. மேலும் இது ஒரு பெரிய படம் பட்ஜெட் படம் என்பதால் இதற்கான Pre Production வேலைகளை முடிக்க சிறிது காலம் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி மீது பெரிய அளவிலான எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் நினைவுகூரத்தக்கது.