தேர்வு ஹால் டிக்கெட்டில் சன்னிலியோன் புகைப்படம் – அதிர்ச்சியடைந்த பெண்

பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான ஆசிரியர் தகுதி தேர்வு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் பெண் ஒருவர் வலைதளத்திலிருந்து தனது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த ஹால் டிக்கெட்டில் தனது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் கவர்ச்சியான புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தார். கல்லூரி முதல்வர் சைபர் க்ரைம் காவல் துறையில் புகாரளித்தார்.
காவல் துறை நடத்திய விசாரணையில் அந்த பெண் கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார். அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்துக்கு பதிலாக சன்னி லியோனின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்துவருகின்றது. தேர்வு ஆணையம் புகைப்படத்தை சரியாக கவனித்திருக்க வேண்டும். இப்படி அலட்சியமாக ஹால் டிக்கெட்டை வெளியிட்டிருக்கக்கூடாது என பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.