Search
Search

சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்

விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஸ்கின், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தின் தலைப்பை பார்த்துவிட்டு இது என்ன மாதிரியான படம்? கிரைம் படமா? த்ரில்லர் படமா? குடும்ப படமா? என ரசிகர்கள் கற்பனை செய்து இருப்பார்கள்.

சமந்தா பகத் பாசில் இருவரும் கணவன் மனைவி. இருவருக்கும் பெரிதாக புரிதல் இல்லாமல் போகிறது. ஒரு நாள் சமந்தாவின் நண்பர் வீட்டிற்கு வருகிறார். அந்த நேரத்தில் அவர் அங்கு மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி காயத்திரியை திருமணம் செய்து கொள்கிறார். காயத்ரிக்கு குழந்தை பிறந்த நிலையில் வீட்டை விட்டு சென்று விடுகிறார். சில வருடங்கள் கழித்து, தன் மனைவி மகனை பார்க்க திருநங்கையாக வந்து குடும்பத்தாருக்கு அதிர்ச்சி தருகிறார் விஜய் சேதுபதி.

இன்னொருபுறம் ரம்யா கிருஷ்ணன் மிஸ்கின் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு மூன்று நண்பர்கள். அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவம்.

இந்த மூன்று சம்பவங்கள் இடம்பெறும் கதாபாத்திரங்கள் போலீஸ் அதிகாரியாக வரும் பகவதி பெருமாள் உடன் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.

இறுதியில் பகத் பாசில் சமந்தா எப்படி தப்பித்தார்கள்? விஜய் சேதுபதி குடும்பத்தின் நிலை என்ன? ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன? இவை அனைத்தும் கலந்த நல்லது கெட்டது தான் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து அவர்களின் வலிகளை தன் நடிப்பின் மூலம் வெளிக்காட்டி இருக்கிறார். சமந்தா இந்த படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். பகத் பாசில் சிறுசிறு இடங்களில் கூட தனது நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். ரம்யா கிருஷ்ணன் தனது திறமையான நடிப்பால் இந்த படத்திலும் அசத்தியிருக்கிறார்.

இயக்குனர் மிஸ்கின் ஒரு கிறிஸ்தவ போதகராக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் முதல் பாதி காமெடி கலந்த விறுவிறுப்புடன் செல்கிறது. இரண்டாவது பாதி காமெடியும் திகிலும் கலந்து நகர்கிறது.

இந்த உலகில் ஆண் பெண் அனைவரும் ஒன்றுதான். அவரவர் அவர் வாழ்க்கையை வாழ்வதில் தவறில்லை. நன்மை தீமை இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த உலகத்தில் அனைவரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. என்ற ஒரு கருத்தை புரிய வைத்திருக்கிறார்கள்.

பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா ஸ்கோர் செய்கிறார்.

சூப்பர் டீலக்ஸ் – வாழ்க்கையின் ரகசியம்.

Leave a Reply

You May Also Like