சரத்பாபுவிடம் சவால் விடும் ரஜினி.. அன்று அண்ணாமலை படப்பிடிப்பில் நடந்து என்ன? மனமுறுகிய சூப்பர் ஸ்டார்!

நடிகர் சரத்பாபு கடந்த சில வாரங்களாகவே நோய்வாய்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது, சரத்பாபு அவர்களின் ஆசைப்படி ஹைதராபாத்தில் இறந்த அவருடைய உடல் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவருடைய இறுதிச்சடங்கில் பல முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர், மேலும் அவருடைய மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் மனமுருகி பேசியது அவர்களுடைய நட்பின் ஆழத்தை காட்டியது. தான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தனக்கும், சரத்பாபுவிற்கும் நல்ல நட்பு இருந்ததாக அவர் கூறினார்.
மேலும் அண்ணாமலை படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்தும் அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். நான் ஷூட்டிங் நேரத்தில் அவருக்கு முன்பாக புகை பிடித்தால் அதை பிடுங்கி கீழே போட்டுவிட்டு, நீ நிறைய காலம் வாழவேண்டும் ஆகவே இந்த பழக்கம் வேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறுவார்.
நானும் அவர் முன் புகைபிடிக்கமாட்டேன், இந்நிலையில் அண்ணாமலை படத்தில் அவர் முன்பு நின்று நான் சவால் விடும் காட்சி படமாக்கப்பட்டது, அப்போது பல டேக் சென்றபிறகும் என்னால் அந்த காட்சியை சரியாக நடிக்கமுடியவில்லை.
உடனே கீழே இறங்கி வந்த சரத்பாபு, என்னை ஒரு நாற்காலியில் அமரச்சொல்லி, எனக்கு ஒரு சிகரெட் கொடுத்து பிடிக்க சொன்னார். அதன் பிறகு தான் கொஞ்சம் டென்ஷன் குறைந்து அந்த கட்சியை நன்றாக நடித்தேன். என் உடல் நலத்தின் மீது அதிகம் அக்கறைகொண்ட அந்த மனிதன் இன்று இல்லை என்று கூறி வருத்தப்பட்டார் ரஜினிகாந்த்.