ஆரம்பத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபம் எடுத்த சிவாஜி ராவ்!

சிவாஜி ராவ் கேக்வாட், கர்நாடகாவில் இருந்து ரயிலில் மெட்ராஸ் வந்த ஒரு சிங்கள் மேன், இன்று இந்த சிங்கள் மேன், தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறிய பல உண்மைக்கதைகளை அனுதினம் கேட்டிருப்போம். பிடித்துக்கொள்ள எதுவும் இல்லாமல் தானே வளர்ந்த ஒரு காட்டுச்செடி.
1975ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரையில் தோன்றிய இவர், இதுவரை 168 படங்களில் நடித்துள்ளார். 169வது படமான ஜெயிலர் நல்ல முறையில் உருவாகி வருகின்றது, ஆனால் 1979, அதாவது இவர் அறிமுகமாகி வெறும் 4 ஆண்டுகளில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை தெரியுமா உங்களுக்கு?.
48 படங்கள், அதாவது சராசரியா ஆண்டுக்கு 12 படங்கள், அதிலும் வெவ்வேறு மொழிகளில், கேட்க சுலபமாக இருக்கும் ஆனால் அதற்கு அவர் மேற்கொண்ட வலி அவருக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில் “ரஜினியும் நானும் அப்போது புது முகங்கள், அப்போ கமல் சாருக்கு சம்பளம் 30,000 ரூபாய், எனக்கு 5000 ரூபாய் ஆனால் ரஜினிக்கு 2000 ரூபாய்”. “அவர் அடிக்கடி என் அம்மாவிடம் பேசும்போது, அம்மா நான் எப்போது கமல் அளவிற்கு சம்பளம் வாங்குவேன் என்பர், அதற்கு என் அம்மா, சீக்கிரம் நீ பெரிய ஆளாக வருவாய் என்று வாழ்த்துவார்கள்” என்று ஸ்ரீதேவி கூறினார்.
அன்று 2000 ரூபாய் சம்பளம் வாங்கிய சூப்பர் ஸ்டாரின் இன்றைய சம்பளத்தை கேட்டல் நமக்கே தலைசுற்றும். இதுவே வளர்ச்சி.