தலைவர் 171.. சூப்பர் ஸ்டாரை இயக்கவிருக்கும் இயக்குநர் இவர்தானா? – முணுமுணுக்கும் கோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, இந்த மனிதனுக்கு உலக சினிமாவில் பெரிதாக அறிமுக தேவையில்லை. கருத்த மேனி, சின்ன கண்கள், பரட்டை தலை, சம்மந்தமே இல்லாத நிறத்தில் உடைகள். ஆனாலும் இந்த மனிதனிடம் (மேஜிசியனிடம்) என்னமோ உள்ளது.
உலக நாயகன் உச்சத்தில் இருந்த காலமது, அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் இந்த திரையுலகில் களமிறங்கியவர் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தனக்கென்ன தனி சாம்ராஜ்யத்தை அமைத்து பயணித்து வருகின்றார்.
வயது 72 ஆகிவிட்டாலும், அடுத்த படம் எப்போது நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் ஒரு அசாத்திய திறைமைக்காரர். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் இது அவருடைய 169வது திரைப்படம்.
ஏற்கனவே ரஜினியின் 170வது படமும் லைக்கா தயாரிக்க ஜெய் பீம் ஞானவேல் இயக்கவுள்ளது உறுதியகியுள்ள நிலையில். 171வது படமாக உருவாகவுள்ள படத்தை சென்சேஷனல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான சந்திப்பும் நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.