சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை..!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறாக பதிவு செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து சவுக்கு சங்கர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த சிறை தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அடுத்த முறை விசாரணைக்கு வரும் வரை வழக்கு தொடர்பாக எந்த கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது என்று சவுக்கு சங்கருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.