“70 கோடி.. 9000 சதுரடி?” – பிள்ளைகளுக்காக சூர்யா, ஜோதிகா எடுத்த திடீர் முடிவு

சிறப்பு தோற்றத்திற்காக நடித்தது தவிர பிற மொழிகளில் பெரிய அளவில் நடிக்காத ஒரு நடிகர் தான் சூர்யா. பிரபல நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான இவர் 1997ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளானது. நடனம், வசன உச்சரிப்பு என்று பல விஷயங்களில் குறைகள் உள்ளதாக நேரடியாகவே பலர் குறைகூறி வந்தனர். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தானே செதுக்கி கொண்டார் சூர்யா.
2002ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அதனை தொடர்ந்து வெளியான காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, மாயாவி, கஜினி என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டே வந்தார்.
தன்னுடன் ஆரம்ப கட்டத்தில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜோதிகாவும், சூர்யாவுக்கு இணையான ஒரு நடிகையாக வளர்ந்து வந்தார். சுமார் 26 வருடங்களாக திரையுலகில் பயணித்து வரும் சூர்யா இன்று டாப் நடிகர்கள் லிஸ்டில் உள்ளார்.
இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தங்கள் மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோரின் படிப்புக்காக சுமார் 70 கோடி செலவில் 9000 சதுர அடி வீடு ஒன்றை மும்பையில் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பிள்ளைகளின் படிப்புக்காக தற்காலிகமாக அவர்கள் அங்கு மாறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.