ஏப்ரல் 16.. இன்னும் 5 நாட்களே உள்ளது – தடபுடலாக வெளியான சூர்யா 42 அப்டேட்!

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வெளியீடு இருக்கிற திரைப்படம் தான் சூர்யா 42. மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது என்றும் தமிழில் இதுவரை இந்த அளவிலான பட்ஜெட் கொண்டு எந்த திரைப்படமும் தயாரிக்கபடவில்லை என்றும் கூறப்படுகிறது.
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க சுமார் 10 மொழிகளில் இந்த திரைப்படம் உலகெங்கிலும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருக்கிறது என்று ஏற்கனவே ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி வரும் ஏப்ரல் 16 காலை 9.05 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது என்றே கூறலாம்.