தோல்வியடைந்த இங்கிலாந்து.. காரணமாக இருந்த இந்திய அணியின் குழந்தை..!

பல ஆண்டுகளாக ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சாதனைகள் படைத்தும், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காமல் இருந்த வீரர் தான் சூர்யகுமார் யாதவ்.
பல ஆண்டுகளாக விடா முயற்சி செய்ததினால், அவருக்கு இந்த வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மூன்று தொடர்களிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை, இதனால் நெட்டிசன்கள் பலர் கேப்டன் கோலியை விமர்சனம் செய்திருந்தனர்.
அதன் பின் நான்காவது போட்டியில் யாதவ்க்கு பேட்டிங் வாய்ப்பு கிடைத்தது, அதில் எந்த பயமும் இல்லாமல் பந்துகளை பறக்கவிட்டார். குறிப்பாக சர்வதேச போட்டியில் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு அடித்து துரத்தினார், என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். விருதை பெற்ற சூர்யகுமார் தான் பேட்டிங் செய்த வீடியோவை மீண்டும் குழந்தை போல பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.