“எப்படி இருக்கு இந்த Six pack”.. வெறித்தனமான ஒர்க் அவுட் – நினைத்ததை சாதித்த “ஐரின்”

புதுடில்லியில் பிறந்து கணினி பொறியியலில் பட்டப்படிப்பில் தேறியவர் தான் பிரபல நடிகை டாப்ஸி. சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையில் களமிறங்கினர். அதன் பிறகு நடிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்க இவர் சினிமா துறையில் நுழைந்தார்.
ஒரு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் 2010ம் ஆண்டு திரைத்துறையில் கால்பதித்தார் அடுத்தபடியாக 2011ம் ஆண்டு ஐரின் கிளவுட் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் அவர்களுடன் இணைந்து ஆடுகளம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
உண்மையில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை அமைத்துக் கொடுத்த படம் இது என்றால் மிகையல்ல. அதன் பிறகு தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என்று பல மொழிகளிலும் இன்று சிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் 2024ம் ஆண்டு வரை அவருடைய கால்ஷீட் நீண்டு வருகிறது. இறுதியாக தமிழில் அவர் ஏலியன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய திரைப்படம் ஒன்றுக்காக மிகவும் கடுமையாக பயிற்சி செய்து சிக்ஸ் பேக் தோற்றத்தோடு தற்பொழுது வளம் வருகிறார் டாப்ஸி.
இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைலாகி வருகிறது