ஓமைக்ரான் பரவல் : ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து. பயணிகள் கடும் அவதி

ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

today news in tamil

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக காத்திருப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இருந்த பரவிவரும் ஓமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் நாடுகளில் வெளியே வந்தாலே கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக பரவி உள்ளது. அமெரிக்காவிலும் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

ஆஸ்திரேலியாவில் நேற்று நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. பல பயணிகளுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென் கொரியா, தாய்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓமைக்ரான் பரவல் குறையும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் எதிர்பார்க்கப்படுகிறது,