Search
Search

“கெட் அப் சூப்பர் Maddy” : படமாகும் ஒரு மாமனிதரின் கதை – வெயிட் அண்ட் வாட்ச்

கோபாலசாமி துரைசாமி நாயுடு, இப்படி இவருடைய பெயரை முழுமையாக சொன்னால் பலருக்கு தெரியாது. ஆனால் ஜிடி நாயுடு என்றால் அறியாதவர்கள் இந்த உலகிலேயே கிடையாது என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு புகழ்பெற்ற தமிழர் அவர்.

இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் இவர் கோவையில் 1893ம் ஆண்டு பிறந்தார். பொறியியல் படிப்பை முடித்த ஜிடி நாயுடு முதன் முதலில் 1937ம் ஆண்டு பாலசுந்தரம் என்பவருடன் இணைந்து மோட்டார் ஒன்றை தயார் செய்தார்.

அது மட்டுமல்ல தொடர்ச்சியாக பல கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்துள்ளார், ஏன் ஜெர்மனியின் அடால் ஹிட்லரை நேரில் சந்தித்த வெகு சில தமிழர்களில் இவரும் ஒருவர். சரி சினிமா செய்திகளில் இவரைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேட்டால் அதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளது.

ஆம், தமிழரான ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு தற்பொழுது படமாக எடுக்க உள்ளனர். இதில் ஜிடி நாயுடுவாக நடிக்க இருப்பது தமிழகத்தின் நிரந்தர சாக்லேட் பாய் மாதவன் தான். ஏற்கனவே அவர் ராக்கெட்டரி என்ற படத்தில் நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கியது குறிப்பிடத்தக்கது.

You May Also Like