மாதம் 1 லட்சம் செலவு : அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் – டாப்சீ சொன்ன சீக்ரெட்
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் புகழ்பெற்ற நடிகை தான் டாப்ஸி. பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த டாப்சீ தனது இளமை வயதில் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டியவர்.
சாப்ட்வேர் இன்ஜினியராகவும் பணிபுரிந்து வந்த டாப்சீ முதன் முதலில் ஜூம்மாண்டி நாதம் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக தோன்றினார். இந்த படம் வெளியானது 2010ம் ஆண்டு, அதன்பிறகு 2011ம் ஆண்டு மட்டுமே தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் 7 திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான ஆண்டுகளம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றுத்தந்தது. அதன் பிறகு வந்தான் வென்றான் என்ற தமிழ் திரைப்படத்திலும் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.
மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வந்தாலும் 2013ம் ஆண்டு முதல் அவர் பாலிவுட் உலகில் பல படங்களில் நடிக்க துவங்கினார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக பல ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
2024ம் ஆண்டு வரை இவருக்கான கால்ஷீட் நீண்டு கொண்டே வருகிறது, தற்பொழுது ஜன கன மன மற்றும் ஏலியன் ஆகிய இரு தமிழ் படங்களில் நடித்த வரும் டாப்சீ, ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் டாப்ஸி தான் நடிக்கவிருக்கும் ஒரு படத்திற்காக மிகவும் கடினமான முறையில் உடற்பயிற்சி எடுத்து வருகிறாராம்.
இது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது, தான் இந்த படத்திற்காக அதிக அளவில் சிரமப்பட்டு உடற்பயிற்சி செய்து வருவதாகவும். Dieticianக்காக மட்டும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்வதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இது தன் தந்தைக்கு தெரிந்தால், ஏன் இவ்வளவு செலவு செய்கிறாய் என்று தன்னை கடிந்துகொள்வார் என்றும் கூறியுள்ளார். சிரமப்பட்டு நடிப்பது சரிதான், ஆனால் அதற்காக மாதம் 1 லட்சம் சம்பளத்தில் ஒரு நிபுணரா என்று ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.
