Search
Search

தல அஜித் வழங்கும் AK Moto Ride – பயண விரும்பிகள் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

தல அஜித் குமார்! மிகசிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் வலம்வரும் அழகன். தோற்றமும் சரி, உள்ளமும் சரி, சாந்தமாக இருந்தாலும் மனதில் பட்டத்தை பளிச்சென்று பேசும் நேர்கொண்ட பார்வை உடையவர். தன் படத்தை பார்த்து மகிழ்ந்தாள் மட்டும் போதும், எனக்கு ரசிகர் மன்றங்கள் தேவையில்லை என்று கூறிய நல்ல நடிகர்.

நடிப்பு மட்டுமே முழுநேர தொழிலாக இல்லாமல், துப்பாக்கி சுடுதல், Drone பராமரிப்பு, RC வகை வானுர்திகளை இயக்குவது என்று மெகானிக்கல் மூளை கொண்டவர் அஜித். அந்த வகையில் இவர் வாழ்வோடு ஓடிப்போன ஒன்று தான் பைக் ரைடிங்.

இந்நிலையில் AK Moto Ride என்ற ஒரு நிறுவனத்தை தற்போது துவங்கியுள்ளார் அஜித் குமார், இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளுக்கும் பைக்கில் சென்று சுற்றிப்பார்க்கும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்று தான் கூறவேண்டும்.

சரி இந்த நிறுவனம் குறித்து அஜித் சொன்னது என்ன?, அவர் வெளியிட்ட அறிக்கையில் “இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சம் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள வாகன ஓட்டிகள், பயணத்தை விரும்பும் அனைவருக்கும் ஏகே மோட்டோ ரைட் சுற்றுப்பயணங்களை வழங்கும்.”

“இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்பவர்களுடைய பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மையும், பாதுகாப்பையும் உறுதி செய்து, அவர்களுக்கு உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும்”.

“இந்த பயணங்களுக்கு தேவையான அனைத்தையும், தொழில்முறை வழிகாட்டிகள் மற்றும் மோட்டர் சைக்கிள் சுற்றுப் பயணங்களில் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் உதவுவார்கள்”, என்று தெரிவித்துள்ளார். இந்த பயணங்களுக்கு எப்படி அப்ளை செய்வது? கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like