உலக அளவில் மூன்றாம் இடம்.. இந்திய அளவில் முதலிடம் – தளபதியின் புதிய ரெகார்ட் பிரேக்!

முன்பை விட இந்த காலகட்டத்தில் திரைத்துறையில் உள்ள உச்ச நட்சத்திரங்களுடன் எப்போதும் இணைந்திருக்க தற்பொழுது உள்ள ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பு தான் சமூக வலைதளங்கள்.
இன்றைய தேதியில் ஏறக்குறைய அனைத்து துறை பிரபலங்களும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜய் அவர்களும் ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவுகளை இடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இருப்பினும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கம் வராமல் இருந்தது ஒரு பெரிய வருத்தமாகவே ரசிகர்களுக்கு இருந்து வந்த நிலையில், நேற்று தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக உள்ளே நுழைந்தார். லியோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஹலோ நண்பா மற்றும் நண்பி என்று பதிவிட்டு தனது முதல் இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டார்.
பொதுவாக ரெக்கார்டுகளை பிரேக் செய்யும் மன்னனாக கருதப்படும் தளபதி விஜய், தற்போது இன்ஸ்டாகிராமிலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை இன்ஸ்டாகிராமில் அதிகபட்சமாக ஒரு மில்லியன் followersகளை மிகக்குறைவான நேரத்தில் பெற்றது BTS (43 நிமிடங்கள்) அணியை சேர்ந்த ஒருவர்தான்.
அவரை தொடர்ந்து 59 நிமிடங்களில் 1 மில்லியன் Followersகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார் ஏஞ்சலினா ஜூலி. மூன்றாம் இடத்தில் மூன் என்ற பிரபலம் இருந்துவந்தார், இவருக்கு 105 நிமிடங்களில் 1 மில்லியன் Followers கிடைத்தனர்.
தற்போது மூன் அவர்களை பின்னுக்கு தள்ளி 99 நிமிடத்தில் 1 மில்லியன் ஹிட் செய்துள்ளார் தளபதி விஜய். இந்திய அளவில் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.