கண்பார்வையை பாதுகாக்கும் தான்றிக்காய் பயன்கள்

தான்றிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. தான்றிக்காய் இனிப்பும் துவர்ப்பும் சுவை கொண்டது.

தான்றிக்காய் உடலில் உள்ள பித்தத்தை தணிக்கும். தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண், இருமல் ஆகியவற்றிற்கு தான்றிக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

இரண்டு சிட்டிகை தான்றிக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு குணமாகும்.

தான்றிக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை தெளிவடையும். சருமத்திற்கு பளபளப்பை தரும்.

தான்றிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கூந்தல் தைலமாகவும் மூட்டுவலி தைலமாகவும் பயன்படுகிறது.

தான்றிக்காய் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வழங்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும்.

தான்றிக்காய், அதிமதுரம், திப்பிலி மூன்றையும் சேர்த்து கசாயம் செய்து 60 மில்லி குடித்து வந்தால் இருமல் மற்றும் செரிமான பிரச்சனை குணமாகும்

தான்றிக்காய் பொடியுடன் கடுக்காய், நெல்லிக்காய் சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.

Recent Post