Search
Search

பல இந்திய மொழிகளில் வெளியிட முடிவு – “தங்கலான்” மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

சூர்யா 42 மற்றும் தங்களான் ஆகிய இரு முக்கிய திரைப்படங்கள் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெளிவர காத்திருக்கிறது. மேலும் இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் சிம்புவின் பத்து தல திரைப்படமும் ஸ்டுடியோ கிரீன் இயக்கத்தில் தான் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜா ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தை பல இந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட காத்திருப்பதாக கூறியுள்ளார்.

இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவில் தங்கலான், பல மொழிகளில் வெளியிடப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

அதேபோல சூரியா 42 படத்தின் அப்டேட் குறித்து கேட்ட பொழுது, இதுவரை சூர்யா நடித்த திரைப்படங்களில் அதிக பட்ஜெட் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பாகுபலி போன்ற சரித்திர படங்களைப் போலவே மிக அதிக பொருட்செலவில் உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

You May Also Like