“தங்கலான் உருவத்திற்கு மாறும் கரிகாலன்”.. சென்னையில் படப்பிடிப்பு துவக்கம்!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உலக அளவில் வெளியாகி தற்பொழுது நல்ல முறையில் ஓடி வருகிறது. இந்த படத்தில் நடித்த அத்தனை முன்னணி நடிகர், நடிகைகளும் தங்களுடைய பிசியான நேரத்திலும் இந்த திரைப்படத்திற்காக மிகக் கடுமையாக ப்ரமோஷன் பணியில் மூழ்கியிருந்தது அனைவரும் அறிந்தது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில் அவரவர் பணிகளுக்கு திரும்பி உள்ளனர். அந்த வகையில் ஆதித்த கரிகாலனாக நடித்த முன்னணி நடிகர் விக்ரம் தனது தங்கலான் படத்திற்கான பணிகளில் மீண்டும் களமிறங்கி உள்ளார்.
தற்பொழுது சென்னையில் தங்கலான் பட சூட்டிங் நடக்க உள்ளது, ஏறத்தாழ 80 சதவிகித படபிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு VFX மற்றும் கிராபிக்ஸ் பணிகள் துவங்கி, 2024ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
முதல் முதலில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, சில தினங்களுக்கு முன்பு விக்ரமின் பிறந்தநாள் அன்று இந்த படம் உருவாகும் விதத்தை ஒரு வீடியோவாக இந்த பட குழு வெளியிட்டு இருந்தது. அதை பார்த்த ரசிகர்கள், விக்ரம் தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என்று கூறி ஆர்ப்பரித்து வருகின்றனர்.