லோகேஷ் சொன்ன அந்த “இரும்பு கை மாயாவி”.. இந்த கதை உருவானால் எப்படி இருக்கும்?

மேலை நாடுகளை பொறுத்த வரைக்கும் காமிக் புத்தகங்களில் வரும் கற்பனை நாயகர்கள், நாயகிகளை வெள்ளித்திரையில் மாபெரும் பட்ஜெட் திரைப்படமாக உருவாக்குவது பல காலம் தொட்டு நடந்து வரும் ஒரு விஷயம் தான்.
குறிப்பாக மார்வெல் மற்றும் டிசி காமிக் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நூற்றுக்கணக்கான சூப்பர் ஹீரோ படங்கள் இன்றளவும் தொடர்ச்சியாக ஹாலிவுட் சினிமா உலகில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், பிரபல நடிகர் சூர்யா அவர்களுக்கு எழுதிய ஒரு கதை தான் இரும்புக் கை மாயாவி. தற்போது இந்த கதை குறித்த ஒரு சுவாரசியமான விஷயத்தை லஷ்மிகாந்த் என்ற ஒருவர் (சினிமா விமர்சகர்) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இரும்புக்கை மாயாவி என்பது DC காமிக் புத்தகங்களில் வரும் The Steel Claw என்ற கதாபாத்திரத்தின் கதையை சார்ந்து இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த ஸ்டீல் கிளா குறித்த படம் இன்னும் Hollywoodல் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு விபத்தில் தனது கைகளை இழந்து சேர்க்கை (இரும்பு) கைகளை பொருத்திக் கொண்ட ஒரு மனிதனுக்கு எதிர்பாராமல் அடிக்கும் ஷாக் மூலம் அவருக்கு கிடைக்கும் சூப்பர் பவர் தான் கதை. தற்பொழுது இரும்பு கை மாயாவி திரைப்படமும் அந்த கதையை சார்ந்த ஒரு திரைப்படமாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
வரும் காலங்களில் லோகேஷ் கனகராஜ் சூர்யாவை கொண்டு இந்த படத்தை நிச்சயம் இயக்குவார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அப்படி வெளியாகும் பட்சத்தில் அது மெகா ஹிட் படமாக மாறுவது உறுதி. நன்றி லஷ்மிகாந்த்!