உடலின் தசைகளுக்கு வலுகொடுக்கும் தினை மாவு

சிறுதானியங்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் “தினை”. பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் “தினை” மாவு இருந்ததாக கூறபடுகிறது.

இந்த தினையை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்று தற்போது தெரிந்து கொள்வோம். தினந்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும் அவற்றில் இருக்கும் புண்களை குணமாக்கும்.

தினையை மாவாக நன்கு இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களியாக கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலில் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். மேலும் ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும். மேலும் தினை உடலின் தசைகளுக்கு வலுகொடுக்கும், சருமத்திற்கு மென்மைத் தன்மையை கொடுத்து, முகத்தை பளபளப்பு தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது.

தினை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு நிவாரணமாகும். ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த தினையில் வைட்டமின் பி1 சத்து அதிகமாக இருப்பதால், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது. மேலும் இதயத் தசைகளை வலுப்படுத்தி எந்த வித நோய்களும் இதயத்தை தாக்காமல் பாதுக்காக்கிறது.

ஜுரம், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்றவற்றை கொடுத்து வந்தால் குறிப்பிட்ட அனைத்து நோய்களும் குணமாகும். இதனை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும், உடைந்த எலும்புகள் விரைவில் கூடும்.

Recent Post