Search
Search

பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்ட திப்பிலி

திப்பிலி ஒரு மூலிகைத் தாவரமாகும். திப்பிலியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலில் பல நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் சம அளவு எடுத்து தேனில் கலந்து அரை டீஸ்பூன் அளவு காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும்.

பசும்பாலில் திப்பிலி பொடியை போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாயுத்தொல்லை நீங்கும்.

திப்பிலியை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அதில் அரை கிராம் எடுத்து தேனில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் தொண்டை கமறல், பசியின்மை குணமாகும்.

தோல் நீக்கிய சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து அரை கிராம் அளவு தேனில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் ஆகியவை குணமாகும்.

திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், பனங்கற்கண்டு நான்கையும் தலா 100 கிராம் அளவு எடுத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சைனஸ், தும்மல், தலைபாரம் போன்றவை குணமாகும்.

எலுமிச்சை சாறில் திப்பிலியை ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், ஏப்பம் போன்றவை குணமாகும்.

You May Also Like