கள்ளக்குறிச்சி : குடை பிடித்த படி பேருந்தில் பயணிக்கும் பயணிகள்

கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே அரசு பேருந்து மேற்கூரை ஒழிகியதால் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் குடை பிடித்தபடியே பயணம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து வில்லிவலம் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பெய்த கன மழையால் பேருந்தில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே கொட்டியது. இதனால் பயணிகள் தாங்கள் வைத்திருந்த குடையை பேருந்திற்குள் பிடித்துக் கொண்டு சென்றனர்.
பேருந்தின் மேற்கூரை முழுவதும் உடைந்து காணப்படுவதால் புதிய பேருந்துகளை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.