துத்தி இலை மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகைப் பொருள். இது இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது.
மலக்கட்டு, ஆசனவாய் போன்ற பிரச்சனைகளுக்கு துத்தி இலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
துத்தி இலை உடல் சூட்டை தணிக்கும். சிறுநீரை பெருக்கும். காம உணர்ச்சி அதிகரிக்கும்.

மூலச்சூடு
துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு நீங்கும்.
ஆசனவாய் கடுப்பு
துத்தி இலை பொடியை பசும்பாலில் கலந்து நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட ஆசனவாய் கடுப்பு முற்றிலும் குணமாகும்
தொழு நோய்
துத்தி விதைகளைப் பொடி செய்து அதில் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து 200 மில்லி கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள், தொழு நோய் கட்டுப்படுத்தும்.
வெள்ளைப்படுதல்
துத்தி விதையின் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
வயிற்றுப் புழு
துத்திக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்களை நீக்கும். மேலும் வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளையும் குணமாக்கும்.
படர்தாமரை
துத்தி இலையை அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.
மூல நோய்
மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.