சர்வதேச யோகா தினம் | International Yoga Day

2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இனி யோகாவை பற்றியும், யோகாவின் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

யோகா நமது முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய அற்புதமான கலை. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா அவசியம். உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் இன்று யோகா செய்வதை வழக்கமாகி உள்ளனர்.

யோகா பயிற்சி மேற்கொள்வதால், முதுகுத்தண்டை வலுப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும் செய்கிறது. ஞாபக சக்தி, மனம் குவிப்பு திறன், செயல்திறன் போன்றவை மேம்படுகிறது.

Advertisement

உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலைகள் உறுதியடைகின்றன. முதுகு வலி, மன அழுத்தம், பயம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கிறது.

யோகா செய்வதற்கு உணவு கட்டுப்பாடு அவசியமாகும். மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பாஸ்ட்புட் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

International Yoga Day, சர்வதேச யோகா தினம்

தினமும் யோகா சனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

தினமும் யோகா செய்பவர்களுக்கு நரம்பு மண்டலங்கள் பலம் பெறுகின்றன. இதனால் நமது மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது.

இப்படி பல நன்மைகள் இருப்பதால் அனைவரும் யோகாவை முறையாக கற்றுக்கொண்டு செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.