தக்காளிப் பழத்தின் மகத்தான மருத்துவ பயன்கள்
இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் காதல் உணர்வு அதிகம் கொண்ட தம்பதிகள், காதலர்கள் உள்ள நாடுகளாக திகழ்கிறது. இந்த இரு நாட்டுக்காரர்களும் உலகில் அதிகமாக தக்காளி சாறு, தக்காளி சாஸ் வகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
அன்பை மட்டும் அல்ல. காதல் உணர்வை தூண்டும் அதிக பழமும் தக்காளிதான். தக்காளிப் பழத்தில் லைகோபைன் என்ற பொருள் இருக்கிறது. இந்த பொருள் தான் காதல் உணர்வையும், தாம்பத்திய வாழ்வில் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.

நமது தினசரி உணவில் தக்காளி கண்டிப்பாக எடுத்தக்கொள்வோம். தக்காளி உணவிற்கு சுவையை மட்டும் அல்ல, உடலுக்க ஆரோக்கியத்தையும் தருகிறது. இங்கு, தக்காளியில் இருக்கம் சத்துக்கள் பற்றியும், மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம்.
தக்காளியில் உள்ள சத்துக்கள்
வைட்டமின் ஏ, சி, பி, பி6, நார்ச்சத்து, நியாசின் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற சத்துக்கள் தக்காளியில் உள்ளன. கலோரிகள் குறைந்த அளவில் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
தக்காளி பயன்கள் – மருத்துவ குணங்கள்
தக்காளி புத்துணர்ச்சி அளிக்கும். எளிதில் சீரணமாகும்.
வயிற்றுக் கோளாறுகளிலும், ஈரல் கோளாறுகளிலும் நல்ல குணமளிக்கும்.
தக்காளியை சமைத்துண்டாலும், சூப் தயாரித்து உண்டாலும் உடல் வலுப்படும்.
தக்காளி சாறுடன், உப்பு, மிளகு பொடி சேர்த்துக் கொடுத்தால் கர்ப்பிணிகள் ஆரம்பகால வாந்தி நிற்கும்.
தக்காளி சாறுடன் தேன் கலந்து பருக இரத்தம் சுத்தப்படும்.
பழத்தை வேகவைத்துக் கட்டி வர புண் விரைவில் குணமாகும்.
அஜீரணம் மலச்சிக்கல் போன்றவைகளுக்கு இது சிறந்த நிவாரணமாகும். தேனும், ஏலக்காய்த் தூளும் கலந்து பருகினால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
வயிற்று கடுப்பு நோய்க்கு பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றுடன் உட்கொள்ள வேண்டும்
மாலைக்கண், கிட்டப்பார்வை கோளாறு ஆகியவற்றை தடுக்க தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ சத்து உதவுகிறது.
தினமும் காலையில் ஒரு தக்காளி சாப்பிட்டுவர சிறுநீர்ப் பாதையில் கல் தோன்றாதவாறு தடுக்கலாம்.
தக்காளி சிறுநீரில் உள்ள அமிலம் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொற்று நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது
ஒரு கப் தக்காளி சாற்றில் சிறிதளவு உப்பும், சிறிதளவு மிளகுத்தூளும் கலந்து பருகினால் மஞ்சள் காமாலைக்கு நல்லது.
ஒரு டம்ளர் தக்காளி சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு, மிளகு சேர்த்து அதிகாலையிலேயே பருகுவது பித்தம், அஜீரணம், ஏரல் மந்தம், குடலில் மிதமிஞ்சிய வாயு உற்பத்தி, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்
ஒரு டம்ளர் தக்காளி சாற்றுடன் தேனும் ஒரு சிட்டிகை ஏல பொடியும் கலந்து பருக வேண்டும். நுரையீரல் கோளாறுகளில் நிவாரணம் பெற இது உதவும்.
சிறுநீரகப் பையில் ஏற்படும் கல் மற்றும் வயிறு, ஈரல் சுவாச உறுப்புகளில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் தக்காளி சாருக்கு இருக்கிறது.
தக்காளியை அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம். அதனுடைய கூழ்பகுதியை முகத்தில் தாராளமாகப் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடலாம்
தக்காளி பழம் சாப்பிடுவதால் உடலும், உள்ளமும் எப்போதும் நலமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். இதனால் பிற மனிதர்களிடமும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களிடமும் அன்பு செலுத்தும் குணம் இயல்பாக வருகிறது. எனவே தினமும் ஒரு கப் தக்காளி சாறு காலையில் தவறாமல் அருந்தி வாருங்கள்.
இதுபோன்ற மேலும் ஆரோக்கியம் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்கள் சம்பந்தமான குறிப்புகளை படிக்க இணைந்திருங்கள்.

does lasix lower potassium Shen WW Clinical Psychopharmacology for The 21 st Century