ஆபாச ஆடியோ சர்ச்சை : திடீரென அக்கா தம்பியாக மாறிய சூர்யா- டெய்சி
தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் சூர்யா சிவா. அதே பாஜகவில் சிறுபான்மை பிரிவு மாநில தலைவராக இருப்பவர் டெய்சி. இவர்கள் இருவரும் சமீபத்தில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த ஆடியோவில் சூர்யா சிவா டெய்சியிடம் காது கூசும் அளவிற்கு மிக கேவலமான, கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏறபடுத்தியது. இதையடுத்து சூர்யா சிவா குறிப்பிட்ட நாட்கள் கட்சி நிகழ்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாவதி தலைமையில் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இருவரும் திருச்சி சூர்யா எனக்கு தம்பி மாதிரி… டெய்சி எனக்கு அக்கா மாதிரி என இருவரும் பேட்டியளித்தனர்.
தற்போது நெட்டிசன்கள் அவர்கள் இருவரையும் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.
