திரிஷாவின் அடுத்த பயணம்.. விரைவில் வெளியாகும் THE ROAD திரைப்படம்!

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரம் ஏற்று மிக நேர்த்தியாக நடித்திருந்தார் நடிகை திரிஷா. இன்றளவும் அவருக்கு PS படத்திற்காக பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றது. கடந்த 1999ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான “ஜோடி” என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் தான் திரிஷா.
அதன் பிறகு மௌனம் பேசியதே திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். பிறகு மனசெல்லாம் திரைப்படத்தில் கதையின் நாயகியாக தோன்றினார். அதனைத் தொடர்ந்து சாமி, லேசா லேசா, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஜி, கிரீடம் என்று தொடர்ச்சியாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் மற்றும் தல அஜித் என்று கோலிவுட் உலகின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள வெகு சில நடிகைகளில் திரிஷாவும் ஒருவர்.
லியோ படத்தில் நடித்து வரும் அவர், தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். அருண் வசீகரன் என்பவருடைய இயக்கத்தில் AAA சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள THE ROAD என்ற படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்திலிருந்து ஒரு வீடியோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.