கொரோனா தொற்று குறைந்துள்ளதால் துருக்கியில் தளர்வுகள் அறிவிப்பு

துருக்கியில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அந்நாட்டு அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. துருக்கியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. ஜூன் மாதம் முதல் அங்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. கொரோனாவால் துருக்கியில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஞாயிறு ஊரடங்கு நீக்கப்படுகிறது.
திருமணங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சமூக இடைவெளிகளை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
துருக்கி அரசு உள்நாட்டில் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசிக்கு ‘துர்கோவாக்’ என்று பெயரிட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.
மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறன.