திடீரென ட்ரெண்டிங்கான Happy Birthday Sivaangi ஹாஷ் டாக்.. எண்ணம் போல வாழ்வென்று ரசிகர்கள் பாராட்டு!

சிவாங்கி, சில வருடங்களுக்கு முன்பு இந்த பெயரை சொன்னால் உண்மையில் யாருக்குமே தெரியாது, ஆனால் இன்று, ட்விட்டர் பகுதியில் இவர் பிறந்தநாள் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. நல்ல மனமும், திறமையும் என்றுமே பாராட்டப்படும் என்பதற்கு இவர் ஒரு சான்று.
கலைமாமணி பட்டம் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் பிறந்த மிகசிறந்த பாடகி தான் சிவாங்கி. 25 மே 2000ல் கேரளாவில் பிறந்து. அதன் பிறகு தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். பெற்றோரை போலவே படிப்பை விட பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 7வது சீசனில் பங்கேற்று பெரும் புகழ்பெற்றவர். ஆனால் இவருடைய புகழ் உச்சம் தொட ஒரே காரனம் குக் வித் கோமாளி என்ற அந்த ஒரு ஷோ தான். இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை சுமார் 5.3 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்.
அவ்வப்போது படங்களிலும் நடித்து வரும் சிவாங்கி, தாய் மற்றும் தந்தையை போலவே நல்ல குரல் வளம் மிக்கவர். குக் வித் கோமாளியின் முதலில் கோமாளியாக களமிறங்கியவர் இந்த முறை குக் அவதாரம் எடுத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இன்று தனது 23வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Happy Birthday Sivaangi.. Long Live..