Search
Search

“ஆண்டவர் வாசிக்கும் ஸ்டைலே தனி”.. குட்டி மியூசிக் பிரேக் எடுத்த கமல்ஹாசன்!

பல தடைகளை தாண்டி தற்போது வெகு ஜோராக உருவாக்கி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. 1996க்கு பிறகு சுமார் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசனை இந்தியன் 2 படத்தில் இயக்கி வருகின்றார் இயக்குநர் சங்கர் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த படத்தின் சில காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு தான் Taipei நாட்டில் நடந்து முடிந்தது, சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் பீங்காங் பொருள் ஒன்றில் கமல்ஹாசன் இசையமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு சவுத் ஆப்ரிக்கா நாட்டில் நடைபெற்று வருவதாகவும், இந்த காணொளியிலுள்ள அங்கிருந்து வெளியானது தான் என்றும் கூறப்படுகிறது.

மிக நேர்த்தியாக அவர் வாசிக்க இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகின்றது, இசை, நடிப்பு, நாட்டியம், இயக்கம், தயாரிப்பு என்று இவர் அறிந்த விஷயங்கள் பற்றி சொல்ல நாளொன்று போதாது. சங்கர் அவர்களும் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகளோடு ராம் சரண் நடிப்பில் உருவாகும் Game Changer பட பணிகளையும் கவனித்து வருகின்றார்.

You May Also Like