காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் வரலாறு

ஊர்– திருக்காரகம்.
மாவட்டம் -காஞ்சிபுரம்.
மாநிலம் -தமிழ்நாடு.
மூலவர் -கருணாகரப்பெருமாள்.
தாயார் -பத்மாவதி நாச்சியார்.
தீர்த்தம் -அக்ராய தீர்த்தம்.
திருவிழா– வைகுண்ட ஏகாதசி.
திறக்கும் நேரம் -காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8ம ணி வரை.

தல வரலாறு;
பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 53 வது திவ்யதேசம். பெருமாளை நினைத்து தவம் இருந்த கார்ஹ மகரிஷி அளவற்ற ஞானம் பெற்றார். மகரிஷியின் பெயரால் இத்தலம் “காரகம்’ எனப்பட்டது.
இந்தப் பெருமாளை வழிபட்டால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்கார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது, ஒரு கோயிலுக்குள்ளேயே நான்கு திவ்ய தேசங்கள் அமைந்தது போல் வேறு எங்கும் காணமுடியாது.

ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல இறைவன் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.
மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.