உலகத்தையே நெகிழ வைத்த செவிலியரின் புதுமையான வைத்தியம் – வைரலான போட்டோ

தற்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி பல்வேறு நாடுகளில் பல்வேறு நபர்களை சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது.
அதேபோல், பிரேசிலில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தனிமையே உணராத வண்ணம் இருக்க மருத்துவர்கள் பயன்படுத்தும் க்ளேவுசில் சுடுதண்ணி நிரப்பி அவரது கையில் வைத்துள்ளார். நோயாளியின் பார்வையில் நாம் தனியாக இல்லை என்ற உணர்வு அவருக்கு உருவாகும். இதனால் அவர் விரைவில் குணமடைவார்.
இந்த படத்தினை கல்ஃப் நியூஸ் செய்தியாளர் “Hand of God” என்று தலைப்பிட்டு வெளிப்படுத்தியுள்ளார். செவிலியரின் இந்த புதுமையான செயலினை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
