கொரோனாவுக்கு மருந்து என 4 நாட்களாக சிறுநீரை குடித்து வந்த தாய்-மகன்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது தற்போது பல நாடுகளில் குரானா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. ஒரு சில இடங்களில் மூடநம்பிக்கை என்ற பெயரில் தவறான பழக்கவழக்கங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன் இருவரும் தங்களது சொந்த சிறுநீரை கொரோனா வைரஸ் மருந்து எனக் கூறிய நான்கு நாட்களாக குடித்து வந்துள்ளனர்.

Advertisement

இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் அவர்களை அழைத்து விசாரித்தபோது அவர்கள் தங்களது சொந்தக்காரர் ஒருவர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய வீடியோவை பார்த்து இந்த செயலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இது போன்ற போலியான தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.