உட்கடாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

மனதை அடக்கி ஒரே நிலையில் நிலை நிறுத்த உதவும் ஆசனம் உட்கடாசனம். மனதை தூய்மையாக்கும் ஆசனம் உட்கடாசனம்.

உட்கடாசனம் செய்முறை

தரை விரிப்பில் நேராக நின்று கொண்டு பாதங்களை சித்திரக கம்பளத்தில் ஊன்றி, இரு குதிங்கால்களும் மேல்நோக்கி இருக்க மெதுவாக குதிங்கால்கள் மீது உட்கார வேண்டும். உட்காரும் நேரம் இரு தொடைகளும் அகன்று இரு கால்களும் மடங்கும்.

இரு கைகளையும் சின் முத்திரை நிலையில் இரு மூட்டுக்களின்மீது இருக்க வேண்டும். இந்நிலையே உட்கடாசனம் என்ப்படும்.

பின்னர் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பலாம். இதனை இரண்டு, மூன்று முறை செய்யலாம்.

உட்கடாசனம் பலன்கள்

  • குதிங்கால்களை திடப்படுத்தும்
  • தொடை, கால்கள், இடுப்பு, முதுகு போன்றவைகள் வலுப்பெறும்
  • மனதை அடக்கும் சக்தி பெற்ற ஆசனம் என்பதால் ராணாயாமம், தியானம் போன்ற மேற்படிகளுக்கும், குண்டலினிக்கும் உதவும் ஆசனமாகும்.

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.