Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

மதுரா கோவர்த்தநேசன் திருக்கோயில் வரலாறு

ஆன்மிகம்

மதுரா கோவர்த்தநேசன் திருக்கோயில் வரலாறு

ஊர் -மதுரா

மாவட்டம் -மதுரா

மாநிலம்- உத்திரப்பிரதேசம்

மூலவர் -கோவர்த்த நேசன் பாலகிருஷ்ணன்

தாயார் -சத்யபாமா நாச்சியார்

தீர்த்தம் -இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி

திருவிழா -கிருஷ்ண ஜென்மாஷ்டமி இங்கு மிகவும் விசேஷம். அந்த விழாவின் முதல் ஒரு வாரம் வரை கிருஷ்ண சரிதம் முழுவதையும் நாடகமாக நடிக்கிறார்கள். பல லட்சம் மக்கள் அதை காண்கிறார்கள்.

திறக்கும் நேரம் – அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரை.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 100 வது திவ்ய தேசம் ஆகும்.

தல வரலாறு:

கிருஷ்ணர் அவதரித்த ஜென்ம தலம் தான் மதுரா. கிருஷ்ணர் பிறப்பதற்கு முன் வாசுதேவர் சிறை வைக்கப்பட்டார். தங்கை தேவகியின் வயிற்றில் வரும் ஏழாவது கெர்ப்பத்தில் தனக்கு மரணம் என்று கம்சனுக்கு அசரீரி ஒலித்தது .ஆகவே மற்ற குழந்தைகளை எல்லாம் கொன்றான் கம்சன். பின் சிறைச்சாலையில் தேவகிக்கு பிறந்த கிருஷ்ணர் அன்றிரவே ஆயர்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நந்தகோபாலன் வீட்டில் யசோதையின் மகனாக வளர்ந்தார். அங்கு லீலா வினோதங்கள் புரிந்து கோபிகைகளின் இல்லங்களில் ஆடிக் களித்தார். பின் வாலிபனாக மீண்டும் மதுரை வந்து கம்சனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் புதிய மாளிகை கட்டி செல்லும் வரை உள்ள கிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் தலவரலாறு சொல்லப்படுகிறது. மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி சூரசேன வம்சத்தினரின் தலைநகராக இருந்தது மதுரா. அந்த வம்சத்தினரின் குறிப்பிடத்தக்க மன்னன் கம்சன் ராமாயணத்திலும் மதுராவை பற்றி குறிப்பு வருகிறது. ராமன் யமுனை நதிக்கரையில் அர்த்த சந்திர வடிவில் மாடமாளிகைகள், தடாகங்கள் உடன் மதுரா நகரை அமைத்தான். சத்ருக்னனுக்குப் பிறகு யாதவர்கள் வசமானது மதுரா நகரம். வாசுதேவன் பரம்பரையினர் இந்த நகரை ஆண்ட தாகவும் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.

கி.மு 1600 களில் இப்பகுதியை ஆட்சி செய்த மது என்ற மன்னனின் பெயரால் இந்த நகரம் மதுரா என பெயர் பெற்றதாக சொல் சொல்லப்படுகிறது. ஏராளமான மரங்களை கொண்டு இருந்ததால் இந்தப்பகுதி மதுவனம் எனப்பட்டது .பின்னர் மதுபுரா என்று அழைக்கப்பட்டு. அதுவே இப்போது மதுரா ஆனது.

மதுரா கோயிலில் உள்ள மூலவரின் திருநாமம் கோவர்த்த நேசன். கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் .தாயார் சத்யபாமா நாச்சியார் உடன் உள்ளார் .இத்தலத்தை பெரியாழ்வார் ,ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களால் மொத்தம் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது .ஆழ்வார்களால் பாடல்பெற்ற கோயில்கள் தற்போது இல்லை .பிற்காலத்தில் கட்டப்பட்ட துவாரகநாத் மற்றும் மதுரா நாதர் ஆலயங்கள் தான் உள்ளன.

இக்கோயிலில் செயற்கையாக ஒரு குன்றை உருவாக்கி உள்ளனர் .அதன் உள்ளே போனால் கல் கோட்டை போன்ற ஒரு பகுதி வலதுபுறம் இருக்கும் .பெரிய கதவுகளை அடுத்து அமைந்திருக்கும் அறையில் ஒரு மேடை உள்ளது ,அந்த மேடையில் தான் பகவான் கிருஷ்ணர் அவதரித்த இடம் என்று சொல்லப்படுகிறது .மேடையை மக்கள் அனைவரும் கண்களில் ஒற்றிக் கொண்டு செல்கின்றனர் சிலர் அங்கேயே தியானமும் செய்கின்றனர் .

கோயில் கட்டிடத்தை ஒட்டியே இன்னொரு பெரிய கட்டிடம் விசாலமான படிகளுடன் உள்ளது .அதன் உள்ளே சென்றாள் சதுர வடிவில் அமைந்திருக்கின்ற தூண்களில் மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன .பளிங்கினால் ஆன கடவுள் திருஉருவங்கள் இச்சன்னதியில் காணப்படுகிறது .

மதுராவிலிருந்து பிருந்தாவனத்திற்கு 11 கிலோ மீட்டர் தொலைவிலும், கோவர்த்தனத்துக்கு 122 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது . மதுராவில் கோயில் முற்றத்தில் துளசி செடிகளுடன் யாக குண்டம் ஒன்று உள்ளது .சிற்ப வடிவில் தேவகியும், வசுதேவரும் ,கையில் வாளோடு கம்சனும் நிற்கிறார்கள். இப்படி பல சிற்பங்களையும் பார்க்க முடிகிறது.

சன்னதிக்கு வெளியே தசாவதாரக் காட்சியை வரைந்து தொங்க விட்டு இருக்கிறார்கள். மதுராவின் சரித்திரத்தை புரட்டினால் பல காலங்களில் வேறு வேறு வகையில் அங்குள்ள கோயில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது.

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top