சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இன்றைய காலத்தில் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது.

அக்காலத்தில் நம் முன்னோர் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை இன்றைய காலத்தில் மறந்துவிட்டனர். சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

vaditha kanji benefits in tamil

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். மேலும் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும்.

புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் இந்த தண்ணீரில் இருப்பதால் புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

சாதம் வடித்த கஞ்சியில் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை வைத்தால் கால் வீக்கத்தை குறைக்கும்.

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் நீண்ட நேரம் நல்ல எனர்ஜியுடன் வேலை பார்க்க முடியும்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.