Search
Search

“இசை புயல் இசையில் வைகை புயல்” – மாமன்னன் படத்தின் ருசிகர அப்டேட்!

என் ராசாவின் மனசிலே படம் தொடங்கி கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் வைகை புயல் வடிவேலு. இவருடைய நடிப்புக்கும், உடல் மொழிக்கு தனி ரசிகர் கூட்டம், என்றுமே உண்டு.

இவர் நடிப்பிற்காக எந்த அளவிற்கு புகழ் பெற்றாரோ, அதே அளவிற்கு இவருடைய குரலில் வெளியாகும் பாடல்களுக்கு என்று தனியே ரசிகர் கூட்டம் உண்டு. 1995ம் ஆண்டு வெளியான “எல்லாமே என் ராசாதான்” என்ற திரைப்படத்தில் வெளியான “எட்டணா இருந்தா எட்டூரு என் பாட்டை பாடும்” என்ற பாடலின் மூலம் ஒரு பாடகராக அறிமுகமானார்.

இளையராஜா அவர்களுடைய இசையில் ஒலித்த அந்த பாடல், இன்றளவும் ஒரு சூப்பர் ஹிட் பாடல் என்றால் அது மிகையல்ல. அன்று தொடங்கி இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, எஸ்.ஏ ராஜ்குமார், ஹாரிஸ் ஜெயராஜ், சிற்பி, வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா, பரத்வாஜ், தேவி ஸ்ரீ பிரசாத், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ் குமார், டி. இமான் மற்றும் சந்தோஷ் நாராயணன் என்று தமிழ் திரை உலகில் உள்ள அத்தனை முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பல பாடல்கள் பாடியுள்ளார்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பாஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாமன்னன் என்ற திரைப்படத்தில் ஒரு மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிப்பதோடு இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார் வைகை புயல் வடிவேல்.

இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், ஏ. ஆர் ரகுமான் அவர்களுடைய இசையில் முதன் முதலில் ஒரு பாடலை பாடியுள்ளார் வடிவேலு என்பது தான்.

You May Also Like