“கொச்சையான சொற்கள் கொஞ்சம் செவிகேட்குதே”.. வைரமுத்து ட்வீட் வைரல்!

ஐயா வைரமுத்து தமிழ் சினிமாவின் மூத்த கவிஞர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது ஒரு பொன் மாலை பொழுது என்ற ஒரு அருமையான பாடலின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் வைரமுத்து. அன்று முதல் இன்று வரை பலநூறு பாடல்களை எழுதி உள்ள ஐயா வைரமுத்து இதுவரை ஏழு முறை தேசிய விருதுதினை பெற்றவர்.
முதல் முதலாக 1985ம் ஆண்டு “முதல் மரியாதை” திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல்களுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாடல், கருத்தம்மா மற்றும் பவித்ரா என்ற படங்களில் வரும் இரு பாடல்களுக்காகவும் தேசிய விருது பெற்றார்.
சங்கமம் திரைப்படத்தில் வந்த முதல் முறை கிள்ளி பார்த்தேன் பாடல், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல், தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் வந்த கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்ற பாடல் இறுதியாக தர்மதுரை என்ற படத்தில் வெளியான எந்த பக்கம் என்ற பாடல் என்று 7 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது உருவாக்கி வரும் ஒரு புதிய படத்திற்காக ஒரு பாடலை வடிவமைத்து கொடுத்துள்ளார் ஐயா வைரமுத்து. “பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனை கொஞ்சும் மனைவி என்ற காட்சி அமைப்பிற்கு ஒரு பாடலை எழுதியுள்ளார்.
மேலும் அந்த பாடல் உருவான விதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.